தேர்தல் நெருங்கிவிட்டது…

பாராளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. வழக்கம்போல், மிகப் பெரிய செலவில், நமது பிரதிநிதிகளை நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்போகிறோம். அதுவும் இன்று உலகெங்கும் பொருளாதாரத் தேக்கம், சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இவ்வளவு அதிக செலவு நமக்கு தேவையா? தேர்தலை நடத்த எளிய வழி ஏதேனும் கண்டுபிடிக்கவேண்டியது அவசியம் என்று ஏன் அரசுக்குத் தோன்றவில்லையோ தெரியவில்லை.

வேட்பாளர்களும் இந்தமுறை மீண்டும் கணக்கிலடங்கா பணத்தை வாரி இறைப்பார்கள். ஒவ்வொரு வோட்டுக்கும் மதுரை திருமங்கலத்தில் கொடுத்த மாதிரி கட்டுக்கட்டாகக் கொடுக்கப் போகிறார்கள். ஓட்டுகளை வாங்கப் போகிறார்கள்.

ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

இதெல்லாம் வெறும் சலுகைகள். ஏமாற்றுதல்கள். உண்மையான பிரச்னைகளை கடுகளவும் இந்த சலுகைகள் தீர்க்கப் போவதில்லை.

அடுத்து வரும் பதிவுகளில் நான் முக்கியமாக நினைக்கும் தேர்தல் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எழுத இருக்கிறேன்.  மீண்டும் பார்ப்போம்.